ஆன்மிகம்
கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

Published On 2020-10-22 06:29 GMT   |   Update On 2020-10-22 06:29 GMT
கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் என்பதற்கு சில ஆன்மிக மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
>> மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

>> இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

>> தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

>> இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.
Tags:    

Similar News