ஆன்மிகம்
வீட்டில் விளக்கேற்றுவது

வீட்டில் விளக்கேற்றுவது ஏன் தெரியுமா?

Published On 2020-10-21 08:53 GMT   |   Update On 2020-10-21 08:53 GMT
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மயானம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!
விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது.

எதற்கு என்று தெரியுமா?? சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்! இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மயானம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன.

சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.
Tags:    

Similar News