ஆன்மிகம்
புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேர் மூடப்பட்டிருக்கும் காட்சி

காமக்கூர் சந்திரசேகரசாமி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-10-20 06:42 GMT   |   Update On 2020-10-20 06:42 GMT
சந்திரசேகர சாமி சிவன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி தொகுதிக்குட்பட்ட மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் காமக்கூர் கிராமத்தில் சந்திரசேகர சாமி சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெரிய மரத்தேர் சேதமடைந்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஏற்பாட்டின்பேரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. தேர் வெள்ளோட்டமும் நடைபெற்றது. கடந்த சித்திரை மாதம் தேரோட்டம் நடக்க இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட தேருக்கு மேற்கூரை அமைக்க ரூ.16 லட்சத்தில் டெண்டரும் விடப்பட்டது. ஆனால் இதுவரை மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் தேர் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வருகிறது. எனவே விரைந்து மேற்கூரை அமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News