ஆன்மிகம்
காரைக்கால் அருகே வரிச்சிக்குடியில் அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

காரைக்கால் அருகே வரிச்சிக்குடியில் அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

Published On 2020-10-19 07:27 GMT   |   Update On 2020-10-19 07:27 GMT
காரைக்கால் அருகே வரிச்சிக்குடியில் உள்ள வரதராஜப்பெருமாள், அகத்தீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது
காரைக்கால் அருகே வரிச்சிக்குடியில் உள்ள வரதராஜப்பெருமாள், அகத்தீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று பாலாலய பூஜை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதிதாக கட்ட வேண்டும் என அந்தபகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் பேரில் கோவில் கும்பாபிஷேகம் பணிகளை தொடங்குவதற்காக நேற்று பாலாலயம் நடத்தப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தேவதாஅனுக்ஞை, மகாசங்கல்பம், கலசபூஜை நடைபெற்றது. நேற்று காலை திருவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை செய்யப்பட்டு பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தேவஸ்தான அறங்காவலர் வாரிய தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News