ஆன்மிகம்
அக்னி தீர்த்தம்

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களும்-பலன்களும்

Published On 2020-09-20 04:30 GMT   |   Update On 2020-09-19 04:29 GMT
ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள்ளே அமைந்த தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாக அமைந்தவை. ‘அக்னி தீர்த்தம்’ என்று கூறப்படும் ராமேஸ்வரம் கடலில்தான், தீர்த்தமாடுவதை தொடங்க வேண்டும். பின்னர் கோவிலில் உள்ள மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். மற்ற தீர்த்தங்களும், அதன் பலன்களும் வருமாறு:-

தீர்த்தங்களும்.. பலன்களும்..

மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம் - பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம் - உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம் - வசதியான வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம் - மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம் - தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம் - தடைகள் அகலும்.

நீல தீர்த்தம் - எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம் - பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம் - கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம் - எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம் - பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம் - பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம் - முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம் - முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம் - சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம் - கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம் - முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம் - முக்தி அடையலாம்.
Tags:    

Similar News