ஆன்மிகம்
பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்

பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2020-09-18 07:13 GMT   |   Update On 2020-09-18 07:13 GMT
துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை முதல் வாரம் முதல் 5 வாரங்களும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும்.
துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை முதல் வாரம் முதல் 5 வாரங்களும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். மலைமேல் சுமார் 1,532 படிகள் வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் மலைக்கு ஏறி சென்று மூலவரை தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரோனா நோய்தொற்றுகாலம் என்பதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அடிவாரத்தில் இருந்து மேல் மலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் உள்ள சரிந்து இருந்த கற்கள் மற்றும் முட்புதர்கள் செடிகள் மின்சார கம்பியின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகள் ஆகியவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் தலைமையிலான கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News