ஆன்மிகம்
காலிங்கராயன் வாய்க்கால்

இன்று மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காலிங்கராயன் வாய்க்காலில் குவிந்த மக்கள்

Published On 2020-09-17 08:58 GMT   |   Update On 2020-09-17 08:58 GMT
இன்று கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தர்ப்பணம் கொடுக்க வந்த சிலரை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆறு, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது இடங் களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப் பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பதற்காக பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல் பாளையம் ஆற்றங்கரை பகுதிகளில் கூட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இதன் காரணமாக இன்று கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தர்ப்பணம் கொடுக்க வந்த சிலரை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பாவனி கூடுதுறை, கொமுடி காவிரி ஆற்றங்கரை பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடுப்பு வேலிகள் வைத்து கண்காணித்தனர். இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

ஈரோடு மாநகர் பகுதி மக்கள் நூற்றுக்க ணக்கானோர் இன்று காலை முதலே காலிங்கராயன் வாய்க்கல் கரையோரம் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதே போல் மாவட்டம் முழுவதும் காலிங்காயன் வாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Tags:    

Similar News