ஆன்மிகம்
ராகு கேது

ஆலாந்துறை அருகே உள்ள நாகசக்தி மையத்தில் ராகு,கேது பெயர்ச்சி விழா

Published On 2020-09-01 08:28 GMT   |   Update On 2020-09-01 08:28 GMT
கோவையில் பல நூறு வருடங்கள் பழைமையான நாகசக்தி அம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று (செய்வாய்கிழமை) பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறுகிறது.
கோவை ஆலாந்துறை பெருமாள் கார்டனில் ருத்ராட்ச விருச்சத்துடன் 27 நட்சத்திரங்களுக்கான விருட்சங்கள் அமைந்துள்ள வனத்தில் ராகு, கேது பகவான்களுக்கு தனியாக திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு பல நூறு வருடங்கள் பழைமையான புற்றுக்கண் வடிவில் நாகசக்தி அம்மன் கோவிலும் உள்ளது. கொங்கு நாட்டில் ராகு, கேது பகவான்கள் துணைவியருடன் தனி சன்னதியில் இந்த ஸ்லத்தில் மட்டுமே எழுந்தருளி உள்ளனர். இங்கு ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று (செய்வாய்கிழமை) பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறுகிறது.

பச்சாபாளையம் ஸ்ரீராம் சிவாச்சாரியார் தலைமையில் 108 கலசவேள்வி, ருத்ராபிசேகம் மற்றும் பரிகார பூஜைகள் நடக்கிறது. ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிசப ராசிக்கும், கேது பகவான் தனது ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
Tags:    

Similar News