ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-08-13 06:16 GMT   |   Update On 2020-08-13 06:16 GMT
கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. ஆடிகிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையடுத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனோ காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

எனவே அங்கு வந்த பக்தர்கள், மலை அடிவாரத்திலுள்ள மலைப்பாதையில் இருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு மாலை அணிவித்து ஊதுபத்தி, சூடம் ஏற்றி வழிபட்டனர்.
Tags:    

Similar News