ஆன்மிகம்
கடைகளில் சிலைகள் விற்பனை

நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா: கடைகளில் சிலைகள் விற்பனை

Published On 2020-08-10 09:58 GMT   |   Update On 2020-08-10 09:58 GMT
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய அளவு முதல் பெரிய அளவிலான கிருஷ்ணர் சிலைகள் வித, விதமாக இடம் பெற்றுள்ளன.
இந்து கடவுள்களில் கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது உண்டு. மேலும், குழந்தைகளின் கால் தடங்களை அரிசி மாவால் வீட்டு வாசல் முதல் பூஜை அறை பதிப்பது உண்டு. இதில் கிருஷ்ணர் தனது பிஞ்சு பாதங்களால் அடிமேல் அடி வைத்து தத்தி தத்தி வருவதாக ஐதீகம். வீட்டில் பூஜை அறையில் கிருஷ்ணர் சிலைகள் வைத்து, மலர் மாலைகளால் அலங்காரமிட்டு, கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளான சீடை, முறுக்கு, லட்டு, தயிர், வெண்ணெய், அவல் உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்தநிலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய அளவு முதல் பெரிய அளவிலான கிருஷ்ணர் சிலைகள் வித, விதமாக இடம் பெற்றுள்ளன. பக்தர்கள் சிலர் விரதம் இருந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவது உண்டு. மேலும் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மக்கள் பலர் தயாராகி வருகின்றனர்.
Tags:    

Similar News