ஆன்மிகம்
பழனியில் ஆடி சஷ்டியை முன்னிட்டு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாடிய மக்கள்

பழனியில் ஆடி சஷ்டியை முன்னிட்டு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாடிய மக்கள்

Published On 2020-08-10 07:46 GMT   |   Update On 2020-08-10 07:46 GMT
ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு வேல் வடிவில் 108 விளக்கு வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு நேற்று வீடுகள் தோறும் வேல் பூஜையும், கந்தசஷ்டி கவசம் பாடி வழிபட வேண்டும் என்று பொதுமக்களுக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனையடுத்து 3-ம்படை வீடான பழனியில் நேற்று மாலை ஏராளமான வீடுகளின் முன்பு வேல் வடிவில் கோலமிட்டும், விளக்கு வைத்தும் பூஜை செய்யப்பட்டு கந்தசஷ்டி கவசம் பாடினர்.

அந்த வகையில் பழனி அடிவாரம், கச்சேரி புதுத்தெரு, ரதவீதிகள், தேரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளில் கந்தசஷ்டி கவசம் பாடி வேல் பூஜை செய்தனர். அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் வேல் வடிவில் 108 விளக்கு வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News