ஆன்மிகம்
கிருஷ்ணன்

கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் ஒளிபரப்பு:‘இஸ்கான்’ அறிவிப்பு

Published On 2020-08-09 04:30 GMT   |   Update On 2020-08-08 04:17 GMT
‘இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம்) சென்னை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
‘இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம்) சென்னை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. தரிசனத்திற்காக கோவில்களை திறக்கக்கூடாது என்று அரசு உத்தரவுகளின்படி, இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியின்போது ‘இஸ்கான்’ சென்னை கோவில் மூடப்பட்டு இருக்கும். நேரடியாக கோவில் தரிசனம், போட்டிகள், மெய்நிகர் பிருந்தாவன யாத்திரை, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சொற்பொழிவுகள் இவை அனைத்தும் ‘யூடியூப்’ சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து அபிஷேகத்தில் பங்கேற்கலாம். https://www.youtube.com/c/iskconchennai என்ற முகவரியில் பார்க்கலாம்.

ராதா கிருஷ்ணரின் அலங்காரங்கள் வழக்கம் போல் பிரமாண்டமாகவும் அழகாகவும் செய்யப்படும். வருகிற 13-ந்தேதி நந்தோத்ஸவ் மற்றும் ‘இஸ்கான்’ நிறுவனர் ஏ.சி.பக்திவேந்த சுவாமி பிரபுபாதாவின் வியாச பூஜை கொண்டாட்டம் நடைபெறும். இந்த நிகழ்வு காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னையில் உள்ள ‘இஸ்கான்’ கோவிலின் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News