ஆன்மிகம்
துளசி வழிபாடு

பாவங்கள் அனைத்தும் மறைந்து போகச்செய்யும் துளசி வழிபாடு

Published On 2020-08-07 04:25 GMT   |   Update On 2020-08-07 04:25 GMT
துளசியை வீட்டில் வளர்ப்பதாலும், அதை பாசத்தோடு நீரூற்றி பராமரிப்பதாலும், அதைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வதாலும், தினந்தோறும் அதை தொடுவதாலும், நமது மனம், உடல், வாக்கு ஆகியவற்றால் செய்யும் பாவங்கள் அனைத்தும் மறைந்துபோவதாக ஐதீகம்.
மகாவிஷ்ணுவின் வழிபாடுகளில் துளசி முக்கியத்துவம் பெறுகிறது. துளசி மாலையை கழுத்தில் அணிந்துகொண்டோ அல்லது துளசி மணி மாலையை கையில் பிடித்தபடியோ மந்திரங்களை ஜெபித்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். துளசி மணி மாலை அணிந்து கொண்டால் நோய்கள் நெருங்காது. மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். 10 ஆயிரத்திற்கும் அதிகமான துளசி இலைகளைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, துளசி தீர்த்தம், துளசியோடு வைக்கப்படும் நைவேத்தியம் ஆகியவை மகாவிஷ்ணுவுக்கும், கிருஷ்ணருக்கும் மிகவும் பிரியமானவை.

ராம பக்தரான அனுமனுக்கும் கூட துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. ஏனெனில் மகாவிஷ்ணுவின் அவதாரமே ராமர். அந்த மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி, அனுமனுக்கும் உகந்ததாகவே கருதப்படுகிறது. அனுமனுக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டால், சனி பகவானின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. மேலும் துளசி இலைகளைக்கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

நர்மதை நதியின் தரிசனம், கங்கை நதியின் நீராடல் ஆகியவை உயர்வான தெய்வீக நிலையைத் தரக்கூடியது. அதுபோல துளசி இலையை தொட்டு வணங்குவதும் உயர்ந்தது. துளசியை வீட்டில் வளர்ப்பதாலும், அதை பாசத்தோடு நீரூற்றி பராமரிப்பதாலும், அதைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வதாலும், தினந்தோறும் அதை தொடுவதாலும், நமது மனம், உடல், வாக்கு ஆகியவற்றால் செய்யும் பாவங்கள் அனைத்தும் மறைந்துபோவதாக ஐதீகம்.
Tags:    

Similar News