ஆன்மிகம்
ஆதிநாயக பெருமாள் கோவிலில் ராமர் பாதம் பதித்த கல்லிற்கு சிறப்பு பூஜை

ஆதிநாயக பெருமாள் கோவிலில் ராமர் பாதம் பதித்த கல்லிற்கு சிறப்பு பூஜை

Published On 2020-08-06 06:15 GMT   |   Update On 2020-08-06 06:15 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றதையொட்டி, ஆதிநாயக பெருமாள் கோவிலில் ராமர் பாதம் பதித்த கல்லிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ராமேசுவரத்தில் இருந்து ராமர் பாதம் பதித்த ஒரு கல்லை தர்ம ரக்சன் ஸ்தமதி அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு எடுத்து வந்து பூஜித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றதையொட்டி, அந்த கல்லை மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளத்திலுள்ள ஆதிநாயக பெருமாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அந்த கல்லுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ராமநாமத்தை ஜெபித்த படி, அந்த கல் கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதிநாயக பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் திருலோகசந்தர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News