ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா

Published On 2020-07-14 07:07 GMT   |   Update On 2020-07-14 07:07 GMT
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ஆடிப்பூர விழாவில் கொடியேற்றமின்றி பூஜைகள் மட்டும் நடைபெறுகிறது.

இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை அம்பாள் சன்னதியில் தினமும் ஹோமம் நடத்தப்பட்டு, கும்பம் வைத்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க வசதியாக செயலி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News