ஆன்மிகம்
ராமகிரி வாலீஸ்வரர் கோவில்

சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய தலம்

Published On 2020-07-12 04:30 GMT   |   Update On 2020-07-11 06:36 GMT
ராமகிரி வாலீஸ்வரர் கோவில் சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய தலமாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற இடத்தைத் தாண்டியதும் திருக்காரிக்கரை உள்ளது. இந்த ஊர் தற்போது ராமகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார்.

அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம தாங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய தலமாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமான அமைப்பாகும்.

நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையில் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் காலபைரவரும் பிரதான மூர்த்தியாக விளங்குகிறார்.
Tags:    

Similar News