ஆன்மிகம்
அகோரமூர்த்தி

சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய தலம்

Published On 2020-07-11 06:01 GMT   |   Update On 2020-07-11 06:01 GMT
பழவேற்காட்டிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கருங்காலி திருத்தலம் அமைந்துள்ளது. இது பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய தலமாகும்.
சென்னை பொன்னேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கருங்காலி திருத்தலம் அமைந்துள்ளது.

இது பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய தலமாகும். 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

இத்தல இறைவனின் திருநாமம் சிந்தாமணீஸ்வரர், அம்பாளின் திருநாமம் சிவகாமவல்லி என்பதாகும். இத்தல கால பைரவர், திருமண பாக்கியம் அருள்வதால், பைரவத்தலமாகவும் இது விளங்குகிறது.
Tags:    

Similar News