ஆன்மிகம்
சங்கடகர சதுர்த்தி விழா

சோலைமலையில் சங்கடகர சதுர்த்தி விழா

Published On 2020-07-09 04:44 GMT   |   Update On 2020-07-09 04:44 GMT
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி அங்குள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் தினமும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி அங்குள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி மற்றும் வேல் சன்னதியிலும் பூஜைகள் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News