ஆன்மிகம்
துர்க்கை

துர்க்கையும்... அருள்புரியும் திசையும்​

Published On 2020-07-07 08:26 GMT   |   Update On 2020-07-07 08:26 GMT
ராகுவின் அதிதேவதையான துர்க்கை, பொதுவாக வடக்கு திசை நோக்கியே காட்சி தருவாள். சில ஆலயங்களில் திசை மாறியும் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கலாம்.
ராகுவின் அதிதேவதையான துர்க்கை, பொதுவாக வடக்கு திசை நோக்கியே காட்சி தருவாள். சில ஆலயங்களில் திசை மாறியும் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கலாம்.

கிழக்கு நோக்கிய துரக்கை: கதிராமங்கலம் திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள துர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்தத்தலம், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது. இங்கு காவிரி வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது தனிச்சிறப்பு. அதன் கரையில் அமைந்துள்ள நவ துர்க்கைகளுள் ஓர் அம்சமாகிய "வனதுர்க்கை', மிருகண்டு முனிவரால் வழிபடப்பட்டவள். கவியரசர் கம்பர் பெருமானும் இந்த அன்னையின் அருள் பெற்றவர்.

தெற்கு நோக்கிய துர்க்கை: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணதிற்கு அருகே அம்மன்குடி திருத்தலத்திலும் திருவாரூர் ஆந்தக்குடி ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள்.

மேற்கு நோக்கிய துர்க்கை: திருவெண்காடு புதன் திருத்தலம். இத்தலத்தில் துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள் புரிகிறாள். இத்துர்க்கையை வழிபட தடைகள் விரைவில் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

சயன துர்க்கை: பொதுவாக ஸ்ரீ ரங்கநாதரையே பள்ளி கொண்ட கோலத்தில் நாம் தரிசிக்க முடியும். அம்பிகை பள்ளிகொண்ட கோலத்தில் தரிசிப்பது அரிது. ஆனால் திருநெல்வேலியிலிருந்து தாழையூத்துக்குச் செல்லும் வழியில் கங்கை கொண்டான் என்ற திருத்தலத்துக்கு அருகில் உள்ள "பாராஞ்சேரி' என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் துர்க்கையை தரிசிக்கலாம்.
Tags:    

Similar News