ஆன்மிகம்
மணமக்களை அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்லுவது ஏன்?

மணமக்களை அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்லுவது ஏன்?

Published On 2020-07-03 07:27 GMT   |   Update On 2020-07-03 09:13 GMT
திருமணத்தில் போது மணமக்களை அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்லும் சடங்கு ஒன்று உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வசிஷ்டர் என்னும் மாமுனிவரின் தர்மபத்தினி அருந்ததி. மனைவி என்னும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதையே அருந்ததி செயல்படுத்துவார். நீண்ட வம்சவிருத்தி கொண்டவர் இவர்.

பராசர முனிவருக்குப் பாட்டி. வியாசருக்குக் கொள்ளுப் பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர்.

அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News