ஆன்மிகம்
சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு ரூ.10 கோடியில் தங்கத்தேர்

சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு ரூ.10 கோடியில் தங்கத்தேர்

Published On 2020-06-06 03:14 GMT   |   Update On 2020-06-06 03:14 GMT
துமகூரு மாவட்டம் எடியூரில் சித்தலிங்கேஸ்வரா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூருவை சேர்ந்த காண்டிராக்டரான சிவக்குமார் தங்கத்தால் செய்யப்பட்ட தேரை காணிக்கையாக வழங்கியுள்ளார்
துமகூரு மாவட்டம் எடியூரில் சித்தலிங்கேஸ்வரா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூருவை சேர்ந்த காண்டிராக்டரான சிவக்குமார் தங்கத்தால் செய்யப்பட்ட தேரை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அந்த தங்கத்தேர் 20 கிலோ தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 9 அடி உயரமும், 4½ அகலத்துடனும் தங்கத்தேர் அமைந்துள்ளது. இந்த தங்கத்தேரை பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரியான கிருஷ்ணய்யா ஷெட்டி என்பவர் வடிவமைத்திருக்கிறார். தற்போது அந்த தங்கத்தேர் சித்தலிங்கேஸ்வரா சாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தங்கத்தேரின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த தங்கத்தேரை பார்க்க கிராம மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தேர் என்பதால், அதனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பீதியில் ஊரடங்கு அமலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தேர் கோவிலுக்கு காணிக்கை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News