ஆன்மிகம்
வைகாசி விசாகத்தையொட்டி பட்டிவீரன்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

வைகாசி விசாகத்தையொட்டி பட்டிவீரன்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-06-05 06:37 GMT   |   Update On 2020-06-05 06:37 GMT
பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோவில்களில் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் முருகன் கோவில்களில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெறவில்லை. மாறாக பக்தர்கள் இன்றி பல கோவில்களில் வைகாசி விசாக நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றன. அதன்படி பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் உலக நன்மைக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளித்தார். இதேபோல் அய்யம்பாளையம் அருள்முருகன் கோவிலிலும் வைகாசி விசாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
Tags:    

Similar News