ஆன்மிகம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று நடைபெறுகிறது

Published On 2020-06-01 07:32 GMT   |   Update On 2020-06-01 07:32 GMT
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று நடைபெறுகிறது. ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் ராவண சம்ஹாரமும்,2-ம் நாளில் கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணர் பட்டாபிஷேகமும் 3-வது நாளில் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் முதல் 2 நாள் விழா ரத்து செய்யப்பட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் கோதண்ட ராமர்கோவில் வளாகத்தில் 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று ராமேசுவரம் கோவிலின் கருவறையில் ராமபிரான் சிலை அருகே உள்ள விபீஷ்ணரின் சிலைக்கு கோவிலின் குருக்கள் சஞ்சீவி பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். தொடர்ந்து ராமபிரான் மற்றும் விபீஷ்ணருக்கு சிறப்பு மகாதீப ஆராதனை நடைபெற்றது.


3-ம் நாள் திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவிலில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு சாமி சன்னதி மற்றும் கருவறையில் நடைபெறுகிறது.முதல்முறையாக ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறஉள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News