ஆன்மிகம்
காமாட்சி விளக்கு

காமாட்சி விளக்கின் சிறப்பு

Published On 2020-05-29 07:34 GMT   |   Update On 2020-05-29 07:34 GMT
விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானதாகும். பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் லாபம் அதிகரிக்கும்.
விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானதாகும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் லாபம் அதிகரிக்கும்.

பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குகளை பத்திரமாக அரிய பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கேயாகும்.

புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதன் மீது தீபம் ஏற்றப்படும்.

பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
Tags:    

Similar News