ஆன்மிகம்
சாளக்கிராமம்

சாளக்கிராம வடிவங்கள்

Published On 2020-05-26 07:31 GMT   |   Update On 2020-05-26 07:31 GMT
ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது, ‘லட்சுமி நாராயண சாளக்கிராமம்.’
ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது, ‘லட்சுமி நாராயண சாளக்கிராமம்.’ நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ‘லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்.’ இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ‘ரகுநாத சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ‘வாமன சாளக்கிராமம்.’ வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.

விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது, ‘ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.’ விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும், அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ‘ரணராக சாளக்கிராமம்.’ பதினான்கு சக்கரங்களும் கொண்டது ‘ஆதிசேஷ சாளக்கிராமம்.’ சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது ‘மதுசூதன சாளக்கிராமம்.’

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது ‘சுதர்சன சாளக்கிராமம்.’ மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது ‘கதாதர சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ‘ஹயக்ரீவ சாளக்கிராமம்.’ இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது ’லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.’ துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது ‘வாசுதேவ சாளக்கிராமம்.’ சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது ‘பிரத்யும்ன சாளக்கிராமம்.’ விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது ‘அநிருத்த சாளக்கிராமம்.’
Tags:    

Similar News