ஆன்மிகம்
பத்ரகாளியம்மன்

கொரோனா வைரஸ் காரணமாக அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ரத்து

Published On 2020-05-26 06:44 GMT   |   Update On 2020-05-26 06:44 GMT
இந்த ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4-ம் கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது.



காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், மகிஷ சம்ஹார பெருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் மகா மாரியம்மன் கோவிலிலும் தீமிதி திருவிழா நடைபெறுவதும் வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களில் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டு அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News