ஆன்மிகம்
காவடி

முருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்

Published On 2020-05-22 07:21 GMT   |   Update On 2020-05-22 07:21 GMT
காவடிகளில் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன் என்று கூறப்படுகிறது.
காவடிகளில் பலவகையான காவடிகள் இருக்கின்றன; ஆனால் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. அவ்வாறு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று காணலாம்...

தங்கக் காவடி பலன்: நீடித்த புகழ்.

வெள்ளிக் காவடி பலன்:நல்ல ஆரோக்கியம்.

பால்க் காவடி: பலன்:செல்வச் செழிப்பு.

சந்தனக் காவடி: பலன்:வியாதிகள் நீங்கும்.

பன்னீர்க் காவடி: பலன்:மனநலக் குறைபாடுகள் விலகும்.

சர்க்கரைக் காவடி: பலன்:சந்தான பாக்யம்

அன்னக் காவடி: பலன்:வறுமை நீங்கும்.

இளநீர்க் காவடி: பலன்:சரும நோய் நீங்கும்

அலங்காரக் காவடி: பலன்:திருமணத்தடை நீங்கும்.

அக்னிக் காவடி: பலன்:திருஷ்டி தோஷம் மற்றும் பில்லி,சூனியம்,செய்வினை நீங்கும்.

கற்பூரக் காவடி: பலன்:வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

சர்ப்பக் காவடி: பலன்:குழந்தை வரம் கிடைக்கும்.

மஞ்சள் காவடி: பலன்:வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

சேவல் காவடி: பலன்:ஏதிரிகள் தோல்லை நீங்கும்.

புஷ்ப(மலர்) காவடி: பலன்:நினைத்தது நிகழும்.

தேர்க் காவடி: பலன்:உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி.

மச்சக் காவடி: பலன்:வழக்கு விஷயங்களிலிருந்து விடுபட நேர்மையான தீர்ப்பு கிடைக்க.

மயில்க் காவடி: பலன்:இல்லத்தில் இன்பம் நிறைய.குடும்ப பிரச்சனை நீங்க.

பழக் காவடி: பலன்:செய்யும் தொழிலில் நலம் பெருக.லாபம் கிடைக்கும்.

வேல் காவடி: பலன்: ஏதிரிகள் நம்மை பார்த்து அஞ்சிட.

கந்தன் மீது முழு மன நம்பிக்கையுடன்,முருகனுக்குரிய தினத்தில், சரியான விரத முறைகளை கையாண்டு; காவடி எடுத்தால் கந்தன் மனம் மகிழ்ந்து வேண்டியாது அருள்வார் வேல் ஏந்திய வேலவன்.
Tags:    

Similar News