ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து

Published On 2020-05-22 05:32 GMT   |   Update On 2020-05-22 05:32 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொரோனா பீதி காரணமாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் யாரும் காவடி எடுத்து வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தரப்படவில்லை. கோவில் நடை மட்டும் திறக்கப்பட்டு ஆகம விதிப் படி பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது.

கொரோனா ஊரடங் கால் மதுரையில் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டது.

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 5-ந்தேதி விசாக திருவிழாவும் நடக்க இருந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் யாரும் காவடி எடுத்து வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News