ஆன்மிகம்
நரசிம்மர்

நரசிம்மர் தரிசனம்

Published On 2020-05-21 06:13 GMT   |   Update On 2020-05-21 06:13 GMT
ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரசிம்மரை, மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

நரசிம்மருக்கு ‘நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி’ ஆகிய பெயர்களும் உண்டு.

திருமாலின் பத்து அவதாரங்களில், பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். ஆனால் அந்த இரு அவதாரங்களும் அதிகம் வணங்கப்படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

சோளிங்கரின் உண்மையான பெயர், சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது ‘சோளிங்கர்’ என்றாகிப் போனது.

சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்களகிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னிதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

மகாலட்சுமிக்கு ‘பத்ரா’ என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மரை ‘பத்ரன்’ என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் ‘மங்களமூர்த்தி’ என்று அர்த்தம்.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில்கள் இருக்கின்றன. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.
Tags:    

Similar News