ஆன்மிகம்
பால்சுனை கண்ட சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பால்சுனை கண்ட சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

Published On 2020-05-21 04:34 GMT   |   Update On 2020-05-21 04:34 GMT
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலில் 20-வது ஆண்டு வருடாபிஷேக பிரதோஷ விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோவிலில் 20-வது ஆண்டு வருடாபிஷேக பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மல்லிகை பூக்களால் தொடுக்கப்பட்ட பூமாலை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் பிரதோஷ விழாவில் உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் மீண்டு விடுபட வேண்டும் என்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மச்சமுனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு தீபாராதனை நடந்தது.
Tags:    

Similar News