ஆன்மிகம்
சிவன்

பிருங்கி முனிவர் தவமியற்றிய மலை

Published On 2020-05-20 05:38 GMT   |   Update On 2020-05-20 05:38 GMT
பிருங்கி முனிவர் பூலோகம் வந்து தவம் செய்த இடம் ‘பிருங்கி மலை’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘பரங்கிமலை’ என்று ஆனதாக கூறப் படுகிறது.

சென்னை அருகே உள்ளது பரங்கிமலை என்ற பகுதி. பிருங்கி என்ற முனிவர், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரைத் தவிர, அவர் அருகில் வீற்றிருக்கும் அன்னை பார்வதிதேவியைக் கூட வணங்க மறுப்பவர். ‘தனியாக அமர்ந்திருப்பதால் தானே ஈசனை மட்டும் சுற்றி வந்து பிருங்கி முனிவர் வணங்கிச் செல்கிறார்’ என்று நினைத்த பார்வதி தேவி, ஈசனின் அருகில் ஒட்டியபடி அமர்ந்திருந்தார்.

அப்போது பிருங்கி முனிவர், வண்டு உருவம் கொண்டு இறைவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்றார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபம் நீங்க பிருங்கி முனிவர் பூலோகம் வந்து தவம் செய்த இடம் ‘பிருங்கி மலை’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘பரங்கிமலை’ என்று ஆனதாக கூறப் படுகிறது.

Tags:    

Similar News