ஆன்மிகம்
உற்சவ விழாவையொட்டி ஆனந்தகிரி கோவிலில் சிறப்பு பூஜை

உற்சவ விழாவையொட்டி ஆனந்தகிரி கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-05-20 05:01 GMT   |   Update On 2020-05-20 05:01 GMT
ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு உற்சவ விழா நடைபெறாத நிலையில் தினசரி நடைபெறும் பூஜைகள், மண்டகப்படிகள் கோவில் வாசலில் நடைபெற்று வந்தன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கொடைக்கானல் நகரில் உள்ள மூஞ்சிக்கல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் உற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உற்சவ விழா நடைபெறாத நிலையில் தினசரி நடைபெறும் பூஜைகள், மண்டகப்படிகள் கோவில் வாசலில் நடைபெற்று வந்தன.

இதனிடையே உற்சவ விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மன் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டது. உற்சவ விழாவின் போது தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாததின் காரணமாக அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்கள் கோவிலின் எதிரே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Tags:    

Similar News