ஆன்மிகம்
நாழிக்கிணறு

சிறப்பு மிக்க செந்தூர் கிணற்று நீர்

Published On 2020-04-05 04:30 GMT   |   Update On 2020-04-03 05:28 GMT
திருச்செந்தூரில் உள்ள ஒரு நீர் ஊற்றுக்கு ‘நாழிக்கிணறு’ என்று பெயர். கடலில் குளிக்கும் பக்தர்கள் இந்த நாழிக்கிணற்று நீரையும் தலையில் தெளித்துக் கொண்டால் வளமான வாழ்வு அமையும்.
திருச்செந்தூரில் உள்ள ஒரு நீர் ஊற்றுக்கு ‘நாழிக்கிணறு’ என்று பெயர். ஓரடி சதுரமும், ஆறடி ஆழமும் கொண்டது. இதில் எடுக்க, எடுக்க நீர் வந்து கொண்டேயிருக்கும். முருகப்பெருமான் தன்னுடைய படைவீரர்களுடன் இணைந்து, சூரபதுமன் தலைமையிலான அசுரப்படையுடன் போர் புரிந்தார்.

அப்பொழுது தனது படைவீரர்களின் தாகத்தைத் தீர்க்க, தன்னுடைய சக்திவேலால் பூமியைத் துளைத்து இந்த நீர் ஊற்றை முருகப்பெருமான் உருவாக்கியதாக புராணங்கள் சொல்கின்றன. கடலில் குளிக்கும் பக்தர்கள் இந்த நாழிக்கிணற்று நீரையும் தலையில் தெளித்துக் கொண்டால் வளமான வாழ்வு அமையும்.
Tags:    

Similar News