வரும் 22-ந் தேதி மாலை 6 மணி முதல், வரும் 24-ந் தேதி மாலை வரை வீரராகவ பெருமாள் கோவில் மூடப்பட உள்ளதாக, கோவிலை பராமரித்து வரும் அகோபில மட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கோவிலுக்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தெப்பக் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் 23, 24-ந் தேதி அமாவாசையின் போது, ஆந்திர பகுதிகள் மற்றும் காஞ்சீபுரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வருவர்.
அவ்வாறு வரும் பக்தர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளது.
எனவே, அரசின் அறிவுறுத்தலின்படி, வரும் 22-ந் தேதி மாலை 6 மணி முதல், வரும் 24-ந் தேதி மாலை வரை வீரராகவ பெருமாள் கோவில் மூடப்பட உள்ளதாக, கோவிலை பராமரித்து வரும் அகோபில மட நிர்வாகம் தெரிவித்துள்ளது.