ஆன்மிகம்
வலம்புரிச் சங்கு

அபிஷேகத்திற்கு வலம்புரி சங்கை பயன்படுத்த காரணம்

Published On 2020-03-20 06:38 GMT   |   Update On 2020-03-20 06:38 GMT
108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு, புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் ‘சங்காபிஷேகம்’ எனப்படும். இந்த அபிஷேகத்திற்கு வலம்புரி சங்கை பயன்படுத்துவார்கள்.
108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு, புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் ‘சங்காபிஷேகம்’ எனப்படும். இந்த அபிஷேகத்திற்கு வலம்புரி சங்கை பயன்படுத்துவார்கள். கார்த்திகை மாதம் சோம வாரத்தன்று சிவபெருமானுக்கு இந்த அபிஷேகத்தைச் செய்வது மிகவும் சிறப்பானது. சங்காபிஷேகத்தை கண் குளிரக் கண்டு, இறைவனைத் தரிசித்தால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். இப்படிப் பெருமைகள் பெற்ற வலம்புரிச் சங்கில், காசுகளை வைத்து முக்கிய தினங்களில் வழிபட்டு வந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

* ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

* கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே ‘சங்கு’ என்றாலும், அது குபேரன் அருளைப் பெற்றுத் தருவதாக விளங்குகிறது.

* வலம்புரி சங்கில் தீர்த்தம் வைத்து துளசி இட்டு, பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால், நமக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் அது விலகிவிடும்.

* சுவாமிக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்தாலும், நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் அகன்றுவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் இருக்கும் வலம்புரிச் சங்கில் குபேரன் இருப்பதாக ஐதீகம்.

* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில், துளசி தீர்த்தத்தை வலம்புரி சங்கில் இட்டு, வெள்ளிதோறும் இல்லத்தில் தெளித்து வந்தால் தோஷம் அகலும்.

* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய, திருமணத் தடை விலகும்.

* அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பவுர்ணமி தோறும் வலம்புரி சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்து வந்தால், கடன் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 16 வலம்புரி சங்கு கோலம் இட்டு, நடுவில் தீபம் ஏற்றிவைத்தாலும் கடன் பிரச்சினை அகலும்.

* சுத்தமான, உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி - சூனியங்கள், ஏவல்கள் நெருங்காது.

* இறைவனுக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால், பத்து மடங்கு அபிஷேகம் செய்த பலனைக் கொடுக்கும்.
Tags:    

Similar News