ஆன்மிகம்
நாகராஜா கோவில்

எடுக்க எடுக்க வரும் புற்று மண்

Published On 2020-03-22 04:30 GMT   |   Update On 2020-03-19 09:18 GMT
தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்ணே நாகர்கோவில் நாகராஜ கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.
நாகர்கோவில் நாகராஜ கோவில் கரு வறையின் மேற்கூரை ஓலை வேயப்பட்டதாக இருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். களக்காடு மன்னரிடம் நாகராஜர் கனவில் தோன்றி தான் விரும்புவது ஓலை கூரை தான் என்றும், அதை அங்கிருந்து மாற்றக்கூடாது என்றும் கூறினார் என்பர்.

அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகின்றது என்றும், வருடம்தோறும் கூரை வேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றன. இங்கு மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர் இங்கு தண்ணீரிலே தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதம் ஆகும். இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.

எவ்வளவோ காலமாக எடுத்தும் அந்த மண் குறையாமல் இருப்பது அதிசயிக்கத்தக்க ஒரு பேருண்மை ஆகும். இவ்வாறு இக்கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. இவை இக்கோவிலின் சிறப்பு அம்சங்களாகும்.
Tags:    

Similar News