ஆன்மிகம்
கோதண்டராமர் கோவிலில் திருவிழாவில் 9 வாகனங்களில் சுவாமி வீதியுலா

கோதண்டராமர் கோவிலில் திருவிழா: 9 வாகனங்களில் சுவாமி வீதியுலா

Published On 2020-03-19 06:43 GMT   |   Update On 2020-03-19 06:43 GMT
ஏகதின பிரம்மோற்சவத்தையொட்டி சாமி வீதியுலா நடைபெற்றது. கோதண்டராமர் சுவாமி 9 வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கல்லக்குடி டால்மியா குடியிருப்பு காலனியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நேற்று ஏகதின பிரம்மோற்சவத்தையொட்டி சாமி வீதியுலா நடைபெற்றது.

கோதண்டராமர் சுவாமி காலை 7 மணி முதல் இரவு 7.15 மணி வரை சூரியபிரபை, சேஷ வாகனம், இந்திர வாகனம், ஹனுமந்த வாகனம், கஜ வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபை, கருடவாகனம் என தொடர்ந்து 9 வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில், டால்மியா சிமெண்டு ஆலை தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் சுப்பையா, கல்யாணசுந்தரம் மற்றும் மகளிர் மன்றத்தினர், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் டால்மியா காலனி குடியிருப்பு மற்றும் கல்லக்குடி, பளிங்காநத்தம், பழனியாண்டி நகர், புதிய, பழைய சமத்துவபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலையின் உதவி பொது மேலாளர் குருராஜன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News