ஆன்மிகம்
மருந்தீஸ்வரர் ஆலயம்

மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய 35 தகவல்கள்

Published On 2020-03-01 04:30 GMT   |   Update On 2020-02-25 06:07 GMT
திருவான்மியூரின் மையப் பகுதியில் சுமார் 1 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய 35 தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
1. திருவான்மியூர் விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர்.
2. ராஜகோபுரம் 5 நிலை உடையது.
3. மருந்தீஸ்வரருக்கு தினமும் நைவேத்தியமாக பொங்கல் படைக்கப்படுகிறது.
4. வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே தலம் விளங்குகிறது.
5 திருவான்மியூர் தலத்தில் சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
6. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
7. நடராஜர் அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமார், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளனர்.
8. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
9. அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
10. திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.
11. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
12. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258வது தேவாரத்தலம் ஆகும்.
13. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திருவான்மியூர் ஆலயம் திறந்திருக்கும்.
14. சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாரதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும்.
15. சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
16. சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வணங்குவதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக மேற்கொள்கிறார்கள்.
17. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.
18. திருவான்மியூர் கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம், மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் பராமரிப்புத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
19. அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டு ரூ.75 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
20. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக, அவர்கள் வரிசையில் நின்று தரிசிக்க கோவில் வளாகத்தில் மரக்கட்டைகளால் ஆன தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
21. பக்தர்கள், கட்டளைதாரர்கள், அபிஷேகதாரர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், திருப்பணி உபய
தாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மேற்கு ராஜகோபுரம் வழியாகவும் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்யலாம்.
22. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக கோவில் வணிக வளாகத்திலும், முக்கிய பிரமுகர்களின்
கார்கள் நிறுத்துவதற்கு கோவில் கல்யாண மண்டபப் பகுதி, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், ஆனந்த்
அப்பார்ட்மெண்ட், கலாசேத்திரா பவுண்டேஷன் ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
23. பக்தர்களின் வசதிக்காக 6 இடங்களில் குடிநீர் வசதியும், மாநகராட்சி மூலம் கழிப்பறை வசதியும் கூடுதலாக, சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
24. கோவிலை சுற்றி ஆங்காங்கே கோபுரங்கள் அமைத்து காவல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
25. கும்பாபிஷேகம் நாளில் காலை 7 மணிக்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
26. மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையட்டி சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
27. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள்
பங்கேற்கிறார்கள்.
28. மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.!
29. சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும்,
30. சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
31. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் அடிக்கடி இருக்கின்றன.
32. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
33. சூரசம்ஹாரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் ஆகியவை இத்தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள்.
34. வருடம் 365 நாட்களும் இக்கோயிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும் உள்ளது. ஆன்மிக நூலகம் உள்ளது.
35. இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News