ஆன்மிகம்
சிவார்ச்சனை

சிவார்ச்சனை செய்யும் முறை

Published On 2020-02-22 08:53 GMT   |   Update On 2020-02-22 08:53 GMT
சிவனுக்கு பிடித்தமான பண்டங்களை நிவேதனம் செய்து ஐந்து முகங்களையுடைய தட்டு தீபத்தைக் காட்டியபின் கற்பூர ஆராதனை செய்து, தாம்பூலம் தந்து வணங்கி, குரு உபதேசித்தபடி மந்திரங்களை உச்சரித்து பின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பல சிவஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும்.
சிவனுக்குரிய மலர்களான தாமரை, கொன்றை, ஆத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகம்புல், கருவூமத்தை, துளசி போன்றவைகளைக் கொண்டு சிவமந்திரங்களை உச்சரித்தப்படியே அர்ச்சனை செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் சரலிங்கம் அல்லது அசரலிங்கத்தை நாமே செய்யலாம். கோவில்களில் இருக்கும் பரார்த்த லிங்கத்தை வேதியர்களைக் கொண்டு பூஜை செய்து பின் நறுமணம் கொண்ட குங்கிலியம், அத்தர், சந்தனத்தூள், சாம்பிராணி போன்ற தூபம் காட்டி நமக்குத் தேவையான வரத்தை சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

சிவனுக்கு பிடித்தமான பண்டங்களை நிவேதனம் செய்து ஐந்து முகங்களையுடைய தட்டு தீபத்தைக் காட்டியபின் கற்பூர ஆராதனை செய்து, தாம்பூலம் தந்து வணங்கி, குரு உபதேசித்தபடி மந்திரங்களை உச்சரித்து பின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பல சிவஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். பூஜையில் ஏதேனும் சில தவறுகள் ஏற்பட்டிருப்பின் தன்னை மன்னிக்கும்படி சிவபெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். தாமரை, வில்வம், சதபத்திரம், சங்குபுஷ்பம் போன்ற மலர் கொண்டு அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டால் வேண்டிய வரத்தை சிவபெருமான் அருளுவான். மலர்களால் அர்ச்சனை செய்யும்போது எண்ணிக்கையை எண்ணிக் கொள்ளக்கூடாது. நிறுத்து வைத்து துதிக்க வேண்டும்.

வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்வதைவிடச் சிறந்த வழிபாடு வேறு எதுவும் இல்லை. மூன்று இலைகளைக் கொண்ட வில்வத் தளம் லட்சம் தங்கப் பூக்களுக்குச் சமமாகும். ஒரு ஜாதி மல்லிகை 5 தங்கப் பூக்களுக்கு சமமாகும்.

தருப்பையால் சிவபெருமானை வழிபடுபவர்கள் முக்தியை அடைவர். அருகம் புல்லினால் வழிபடுபவர்களுக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். கருவூமத்தை மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்றவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும். அகத்தி மலர்களால் அர்ச்சித்தால் புகழும், துளசியால் சித்தி, முத்தியும் வெள்ளெருக்கு, உற்பவ, சப்பாத்தி, மாதுளை இவற்றில் ஏதேனும் ஒருவகை மலர்களால் எதிரிகள் இல்லாமல் போவதும் நிறைவேறும்.
Tags:    

Similar News