ஆன்மிகம்
பெருமாளின் நடனம்

பெருமாளின் நடனம்

Published On 2020-02-22 05:52 GMT   |   Update On 2020-02-22 05:52 GMT
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று நடராஜர். இவர் நடனம் ஆடும் திருக்கோலத்தை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதே போல் பெருமாளும் நடனமாடியிருக்கிறார்.
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று நடராஜர். இவர் நடனம் ஆடும் திருக்கோலத்தை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதே போல் பெருமாளும் நடனமாடியிருக்கிறார். திருநெல்வேலி அருகில் உள்ள நவ திருப்பதிகளில் ஒன்று பெருங்குளம்.

செவ்வாய் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் புராணப் பெயர், ‘திருக்குளந்தை’ என்பதாகும். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். அவனை, பெருமாள் நாட்டியமாடியபடி சம்ஹாரம் செய்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘மாயக்கூத்தன்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Tags:    

Similar News