ஆன்மிகம்
யாகம் செய்யப்பட்ட சங்குகள்மூலம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்ததை படத்தில் காணலாம்.

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்

Published On 2020-02-22 04:47 GMT   |   Update On 2020-02-22 04:47 GMT
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி விழா நடந்தது. இதனையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், காலசந்தி பூஜையும், 9 மணிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. முற்பகல் 11 மணிக்கு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் உச்சிகாலை பூஜை நடந்தது.

தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, 5 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி முதல் ஜாம பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் சாமி, அம்மன் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். 8.30 மணிக்கு 108 சங்கு பூஜை நடந்தது.

9.30 மணிக்கு சிவராத்திரி 2-ம் ஜாமபூஜையும், 11.30 மணிக்கு ருத்ராபிஷேக பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் லிங்கோத்பவ 3-ம் ஜாமபூஜை, தீபாராதனை நடந்தது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 4-ம் ஜாமபூஜை, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9 மணிக்குசாமி வீதிஉலா நடக்கிறது. மகாசிவராத்திரியையொட்டி பக்தி பாடல்கள் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.

வேலூரை அடுத்த கருகம்பத்தூர் கிராமத்தில் உள்ள மனோன்மணி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு கோபூஜையுடன் மகாசிவராத்திரி தொடங்கியது. இரவு 2 மணிவரை 5 கால யாகபூஜை நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாமி வீதி உலா நடக்கிறது.
Tags:    

Similar News