ஆன்மிகம்
கடலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதிஉலா

கடலூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதிஉலா

Published On 2020-02-19 04:32 GMT   |   Update On 2020-02-19 04:32 GMT
கடலூரில் அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதிஉலா சென்று வந்தார். இதில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் 6-வது நாளான, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்திலும், தாண்டவராயர் ரி‌‌ஷபவாகனத்திலும் பரிவேட்டை மற்றும் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை வருகிற 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News