ஆன்மிகம்
திருப்பதி முனியப்ப சாமி

திருப்பதி முனியப்ப சாமி கோவிலில் 260 ஆடுகள் பலியிட்டு சிறப்பு வழிபாடு

Published On 2020-02-17 06:09 GMT   |   Update On 2020-02-17 06:09 GMT
திருப்பதி முனியப்ப சாமி கோவிலில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர் அருகே சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை சென்றடைந்தனர்.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு முத்துகருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை வரை 260 ஆடுகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.

Tags:    

Similar News