ஆன்மிகம்
முருகன்

முருகன் தண்டாயுதத்தின் தத்துவம்

Published On 2020-02-16 04:30 GMT   |   Update On 2020-02-14 08:48 GMT
கருணை மலையாக திகழும் கந்தன், தீவினைகள் செய்யும் போது அதை தண்டிப்பவராகவும் விளங்குகிறார். உலக வாழ்வில் போதும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.
சித்து விளையாட்டுகளை தனது அறுபடை வீடுகளிலும் நிகழ்த்தி உலகத்திற்கான தத்துவங்களை உணர்த்தி மக்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறான். கருணை மலையாக திகழும் கந்தன், தீவினைகள் செய்யும் போது அதை தண்டிப்பவராகவும் விளங்குகிறார். உலக வாழ்வில் போதும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.

அதிக ஆசையும், கோபமும், காமமும், கர்வமும் மேலோங்கும்போது உயர்ந்த மதிப்பு தாழ்ந்து போகிறது. இத்தகைய நிலையில் முருகன் தனது தண்டாயுதம் கொண்டு தட்டி வைக்கிறான். வாழை தண்டு கிளைகள் இல்லாது நேரே உயர்ந்து வளர்ந்து செல்வதை போல மனித வாழ்வும் குவிந்து உயர வேண்டும்.

இதனை உணர்த்தவே கிளைகள் இல்லா தண்டினை தனக்கு ஆயுதமாக கையில் ஏந்தி ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் ஞான தண்டாயுதபாணியாக காட்சி அளிக்கிறான் அழகு முருகன். 
Tags:    

Similar News