ஆன்மிகம்
இருக்கன்குடி கோவிலுக்கு அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைமாத கடைசி வெள்ளி திருவிழா

Published On 2020-02-08 04:00 GMT   |   Update On 2020-02-08 04:00 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைமாத கடைசி வெள்ளிக் கிழமை திருவிழாவையொட்டி ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த கோவிலில் தமிழ் மாதங்களான ஆடி, தை, மார்கழி உள்ளிட்ட மாதங்கள் விசேஷ மாதங்களாக கொண்டாடப்படும். இதில் தை கடைசி வெள்ளி திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த திருவிழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றன. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு மாரியம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் முடி காணிக்கை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News