ஆன்மிகம்
கருட சேவை

கருட சேவை உற்சவங்கள்

Published On 2020-01-28 09:03 GMT   |   Update On 2020-01-28 09:03 GMT
பெருமாள் தனது வாகனமான கருடன் மீதேறி அனைவருக்கும் காட்சிதந்து அருள்பாலிப்பதையே ‘கருட சேவை’ என்கிறோம்.
கோவில்களில் நடைபெறும் விழாக்கள் அல்லது உற்சவங்களை, இருவிதமாக வகைப்படுத்தலாம். முதலாவது புராண வரலாற்றின்படியானது. மற்றொன்று ஐதீகம் அல்லது நிகழ்வின் அடிப்படையிலானது. இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்த பிரசித்திப் பெற்ற உற்சவங்களில் ஒன்றே கருடசேவை.

பெருமாள் தனது வாகனமான கருடன் மீதேறி அனைவருக்கும் காட்சிதந்து அருள்பாலிப்பதையே ‘கருட சேவை’ என்கிறோம். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் 24 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, அட்சயதிருதியை அன்று கும்பகோணத்தில் 12 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார்திருநகரியில் 9 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் 5 பெருமாள்கள் ஒன்றுசேரும் கருடசேவை, மற்றும் நாச்சியார்கோயில் என தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பல கருடசேவை உற்சவங்கள் நடைபெறுகின்றன.

இவைதவிர திருப்பதி-திருமலையிலும் கருடசேவை உற்சவம் நடத்தபடுகிறது. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றது, திருநாங்கூர் கருடசேவை.
Tags:    

Similar News