ஆன்மிகம்
ஸ்ரீ ராமலிங்கசவுடேஸ்வரிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்த காட்சி.

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-01-25 05:50 GMT   |   Update On 2020-01-25 05:50 GMT
மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. தை மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவை, ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்துசாமி தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்சென்னகேசவன்தலைமையில்போலீசார்பலத்த பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தனர்.கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையர்ஹர்ஷினிஆகியோர்சிறப்புஏற்பாடுகளை செய்துஇருந்தனர்.

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று  அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.

பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News