ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் ராஜகோபுரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த காட்சி.

நெல்லையப்பர் கோவிலில் நாளை லட்சதீப திருவிழா

Published On 2020-01-23 06:42 GMT   |   Update On 2020-01-23 06:42 GMT
நெல்லையப்பர் கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) லட்ச தீப திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று கோவில் முழுவதும் ஒரு லட்சம் தீபம் ஏற்றப்படும்.
நெல்லையப்பர் கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) லட்ச தீப திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று கோவில் முழுவதும் ஒரு லட்சம் தீபம் ஏற்றப்படும். இந்த லட்ச தீப திருவிழா கடந்த 13-ந் தேதி லட்சத்தீப திருவிழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 18-ந்தேதி சுவாமி கோவில் மணிமண்டபத்தில் ஒரு தங்க விளக்கிலும், 2 வெள்ளி விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது. இந்த விளக்கில் இருந்து தீபம் எடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் சுவாமி கோவிலில் உள்ள உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்மன் கோவில் உள் சன்னதி, வெளிபிரகாரங்கள் ஆகிய இடங்களில் லட்சத்தீபம் ஏற்றப்படுகிறது.

இதில் கலெக்டர் ஷில்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பெருங்குளம் செங்கோல் ஆதினம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவையொட்டி நேற்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தில் நேற்று மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு சென்னை தமிழரசன் தியேட்டர் நாடக குழுவினர் வழங்கிய சூரபத்மன் நாடக நிகழ்ச்சி நடந் தது. இன்று(வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது.
Tags:    

Similar News