ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

Published On 2020-01-23 06:12 GMT   |   Update On 2020-01-23 06:12 GMT
முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா தனிச் சிறப்புடையதாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா வருகிற 30-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 10.30 மணிக்கு மங்கள இசையோடு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு சிம்மாசனத்தில் புறப்பாடும், மாலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

தொடர்ந்து 31-ந்தேதி காலை 9 மணிக்கு யாக சாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மகா அபிஷேகமும், யாகசாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் பிப்ரவரி 1-ந் தேதி வழக்கம் போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

2-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 3-ந்தேதி மாலை 6 மணிக்கு பூச்சப்பர விழாவும், 4-ந் தேதி மாலை யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

5-ந் தேதி மாலையில் பல்லக்கு வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 6-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருத்தேரோட்ட விழாவும், மாலை 6 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும்.

8-ந்தேதி காலையில் யாக சாலை பூஜைகளும், தீர்த்தவாரியும், 11 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், பூஜைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், இருப்பிடம் சேருவதும் நடைபெறும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News