ஆன்மிகம்
வீட்டு வாசலில் மிளகாய் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன்

வீட்டு வாசலில் மிளகாய் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன்?

Published On 2020-01-22 08:42 GMT   |   Update On 2020-01-22 08:42 GMT
நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும், ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து, நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம்.
நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும், ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து, நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம்.

அதில் ஒன்று தான்,  வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.  இதை நமது முன்னோர்கள் எதற்காக செய்தனர்; மூட நம்பிக்கையா;  நிச்சயம் இல்லை, இதன் பின்னணியிலும் அறிவியல், மருத்துவ காரணங்கள் புதைந்துள்ளன.  

எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும், அலட்சுமி கதை தான் கூறுவார். அலட்சுமி என்பது, மஹாலட்சுமியின் சகோதரி மூதேவியாவாள். இவள், வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவாள் என கூறுவர்.

புளிப்பு, காரம், சூடான பொருட்களை அலட்சுமி விரும்புவாள். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவாள். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.

சரி அறிவியல் என்ன கூறுகிறது

எலுமிச்சை மற்றும் மிளகாயில், ‘வைட்டமின் சி’ சக்தி அதிகம் உள்ளது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசம், வீட்டுக்குள், விஷ சக்திகள், நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால், நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

Tags:    

Similar News